இல்லம் தேடிக் கல்வி இரண்டாம் ஆண்டு வெற்றி விழா.

இல்லம் தேடிக் கல்வி இரண்டாம் ஆண்டு வெற்றி விழா.

திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு வெற்றி விழா மகளிர் தின விழாவாக பெரியார் நகர் இராஜ இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கல்விக்குழுத்தலைவர் வே. பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. 230 இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வாளர்கள் வானவில் வண்ணங்களில் VIBGYOR என ஏழு வண்ணங்களில் அணிவகுத்து வந்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீனா வரவேற்புரை ஆற்றினார்.

வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி இராஜசேகர், ஜெயலெட்சுமி, மீனாட்சி வாழ்த்துரை வழங்கினர். ஸ்ரீரங்கம் கோட்ட கல்விக் குழு உறுப்பினர் இராதா, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேட்சென்னி மற்றும் 16 ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பாளர்கள், கல்வியாளர்கள் சிவக்குமார், ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். PLA நிறுவன இயக்குநர் கண்ணாத்தாள் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தேசிய நல்லாசிரியர் ஆஷாதேவி,, மதனா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஆகியோர் பாராட்டுப் பெற்றனர். 100 வயது பாட்டி அருளாயி, ஓய்வு பெற்ற ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் சரோஜா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.

NMMS தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், வீரப்பா, யுவஸ்ரீ, தமிழ்நாடு மாநில கலையரசன் விருது பெற்ற சாய் கிருஷ், மாநில அளவில் சிறந்த குறும்பட நடிகர் விருது பெற்ற லக்க்ஷித் ஆகியோர் பாராட்டப்பட்டனர். விழா ஏற்பாடுகளை சுகுமார் இராமகிருஷ்ணன், அனுராதா ஆகியோர் செய்திருந்தனர். அனைவருக்குமான கேடங்களை அந்த நல்லூர் ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெல்சிட்டா மேரி வழங்கி சிறப்பித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision