திருவரம்பூர் சர்வீஸ் ரோடு வேண்டி ஆர்ப்பாட்டம்

திருவரம்பூர் சர்வீஸ் ரோடு வேண்டி ஆர்ப்பாட்டம்

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடியில் இருந்து அரியமங்கலம் பால் பண்ணை வரை சர்வீஸ் சாலை அமைக்காததால் சாலை விபத்துக்களில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதனை கண்டித்து துவாக்குடி சுங்கச்சாவடி முன்பு   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. சாலையின் எண் NH 81 ஆகும். இந்த சாலை அமைக்கப்படும் பொழுது திருச்சி பழைய பால்பண்னையிலிருந்து துவாக்குடி வரை 14 அரை கிலோ மீட்டருக்கு  சர்வீஸ் சாலை வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு இயக்கத்தினர் எல்லக்குடி சர்வீஸ் சாலை கூட்டமைப்பினர் ஆகியோர் வேண்டுகோள் வைத்தனர்.

ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதற்கு பல்வேறு காரணங்களை கூறி சாலை அமைக்காமல் இருந்தது.  சர்வீஸ் ரோடு கூட்டமைப்பினர் மதுரை ஐகோர்ட் வரை சென்று சாலை அமைப்பதற்கான   உத்தரவை வாங்கினர். இதனால் வேறு வழியின்றி நெடுஞ்சாலை துறை ஆணையம்  சர்வீஸ் சாலை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தனர். ஆனால் சாலை அமைப்பதற்கான அடுத்த கட்ட பணிகள் இதுவரை நடைபெறவில்லை.

சர்வீஸ் சாலை கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியை பிரதிநிதிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால் இப்பகுதியில் ஆயிரம் கணக்கில் விபத்துகளும் உயிர் பலிகளும் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  துவாக்குடியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியை இழுத்து மூடும் போராட்டத்தை இன்று நடத்தப் போவதாக போஸ்டர் ஒட்டி அறிவித்தனர். பின்னர் இன்று தமிழக முதல்வர் திருச்சிக்கு வருவதை ஒட்டி போராட்டத் தேதியை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை இன்று கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றினர். 

சுங்கச்சாவடி முன்பு இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் எம் மணிமாறன் தலைமை வகித்தார். மாநில குழுவை சேர்ந்த எஸ் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் ஆர் ராஜா, மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.லெனின்,  புறநகர் மாவட்ட செயற்குழு ஏ, மல்லிகா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சர்வீஸ் ரோடு அமைத்தராத மத்திய மாநில அரசுகளை கண்டித்து பேசினர். இதில் ஏராளமானமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும்  பொதுமக்கள், சர்வீஸ் ரோடு கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO