ஶ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி முதல் சுற்றில் 89 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 150363 ஆண்கள், 161093 பெண்கள், 28 மூன்றாம் பாலினம் என மொத்தம் 311484 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 116450 ஆண்கள், 120742 பெண்கள், 15 மூன்றாம் பாலினம் என மொத்தம் 237207 வாக்களித்து உள்ளனர். மொத்த 76.15 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில்
அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் 3409 வாக்குகளும்,
திமுக வேட்பாளர் பழனியாண்டி 3498 வாக்குகளும், பெற்றுள்ளனர்.
முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் விட கூடுதலாக 89 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பழனியாண்டி முன்னிலையில் உள்ளார்.