திருச்சியில் இன்று 250 கோடிக்கு ரூபாய்க்கு தங்கம் விற்பனை

திருச்சியில் இன்று  250 கோடிக்கு ரூபாய்க்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியை தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் வாங்கப்படும் எந்த ஒரு பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

அதனால் மதிப்பு மிகுந்த தங்கத்தை ஒரு மில்லி கிராம் அளவிலாவது வாங்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தாலும் இந்நாளில் மக்கள் தங்கநகை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்று திருச்சியில் 250 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகை வியாபாரி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வியாபாரம் குறைவு.  தங்கம் விலை விண்ணை முட்டும் அளவு ஏறினாலும் இன்று அதை ஒரு மில்லி கிராம் அளவு வாங்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

இன்று திருச்சியில் மட்டும் 250 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகி உள்ளதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision