பெண்கள் முன்பு 'சீன் போட்ட வாலிபர் - இப்போ சீரியஸ் - திருச்சி எஸ்.பி ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்

பெண்கள் முன்பு 'சீன் போட்ட வாலிபர் - இப்போ சீரியஸ் - திருச்சி எஸ்.பி ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்

திருச்சி புத்தூர் மூல கொள்ளை தெருவை சேர்ந்த அப்துல் வாகிப் மகன் சீனிரியாஸ் (24). கல்லூரி மாணவரான இவர் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரு வாகனங்களுக்கு நடுவில் செல்வதும் மாநகரில் பள்ளி கல்லூரி மாணவிகள் நடந்து வரும் பொழுது அவர்கள் அருகாமையில் வேகமாக சென்று சீன் போட்டுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்து அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை அதிகரிக்க பள்ளி கல்லூரி மாணவிகள் வரும் சாலைகளில் இருசக்கர வாகனத்தை வைத்து சாகசம் செய்தும், அவர்களை இடிப்பது போல் சென்று கமெண்ட் அடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஒத்தக்கடை, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் கூட்டமாக நடந்து செல்லும் பொழுதும் அவர்கள் அருகாமையில் சென்று இருசக்கர வாகனத்தை வைத்து ரெமோ வேலைகளை செய்து வந்துள்ளார். இவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவர் மீது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு உதவி எண்ணில் புகார் வந்ததை அடுத்து தனிப்படை அமைத்து இவரை பிடித்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து வீடியோ வெளியிட்டுள்ள சீனிரியாஸ்..... நான் செய்தது தவறு தான். ஹீரோயிசம் செய்தும் லைக்குகளை அள்ளுவதற்கும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது உள்ளேன். யாரும் இது போன்று பெண்களை கிண்டல் செய்யும் செயல்களில் ஈடுபடக்கூடாது. அவரவர் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தந்தையை இழந்த நான் காவல்துறை என்னை தேடி தற்போது கைதாகி உள்ளேன். என்னை உதாரணமாக வைத்துக்கொண்டு மற்ற இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision