தென்னக ரயில்வே துறைக்கு இரண்டு முக்கிய கோரிக்கை -திருச்சி எம்பி

தென்னக ரயில்வே துறைக்கு இரண்டு முக்கிய கோரிக்கை -திருச்சி எம்பி

 திருச்சி தொகுதி இரயில்வே துறையில் முக்கியமான இரண்டு நகர்வுகள். ஒன்று: புதுக்கோட்டை இரயில் நிலையத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கான கோரிக்கை கடிதத்தை புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கி, அலைபேசியில் எடுத்துரைத்தேன். அவசியம் ஆவன செய்வதாக உறுதியளித்தார். 

இரண்டு: பொன்மலை இரயில்வே பணிமனையில் வந்தேன்பாரத் போன்ற இரயில்களை பழுதுநீக்கும் உள்கட்டமைப்பை உருவாக்க ஆணை வழங்கியுள்ளது ஒன்றிய இரயில்வே அமைச்சகம். 

எனது திருச்சி தொகுதிக்கு உட்பட்ட இரயில்வே, விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் மக்கள் நலத் திட்டங்களுக்காக, பிற துறை அதிகாரிகளிடம் பேசி, இரு துறைக்கும் பாலமாக செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தேன். அதன் அடிப்படையில் இன்று (30.04.2025) புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையரிடம் அலைபேசியில் பேசியும், கடிதமாகவும் கோரிக்கையை வழங்கியுள்ளேன். 

அதில், புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதை சுட்டிக்காட்டி தண்ணீர் வழங்க கோரியுள்ளேன்.இந்நிலையில், புதுக்கோட்டை இரயில்வே நிர்வாகத்தின் கோரிக்கைப்படி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நீங்கள் தேவையான அளவு தண்ணீரை வழங்குவது இன்றியமையாததாக உள்ளது என்றும் எடுத்துரைத்தேன். 

மரியாதைக்குரிய ஆணையர் அவர்களும் விரைந்து ஆவன செய்வதாக கூறினார். அடுத்தபடியாக, சென்னை பெரம்பூர் பணிமனையில் மட்டுமே இருந்துவந்த வந்தே பாரத் போன்ற இரயில்களை பழுது நீக்கும் உள்கட்டமைப்பை எனது திருச்சி தொகுதிக்குட்பட்ட பொன்மலை இரயில்வே பணிமணையில் ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் ஒன்றிய இரயில்வே அமைச்சகம் தென்னக இரயில்வே துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளது. 

இவ்விரு செய்தியும் திருச்சி தொகுதி இரயில்வே துறையில் முக்கியமான இரண்டு நகர்வுகளாய் கருதுகிறேன். அது நிறைவேறும் நாளுக்காக காத்திருக்கிறேன்.  என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision