அமைச்சர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

அமைச்சர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதி37,37a, 38,38a,39a,39,40a,40வது ஆகிய வார்டு பகுதியில் மக்களிடம் மனுக்களைப் பெற்றார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில்... கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த காட்டூர், திருவெறும்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் ரூபாய் 7,486.78 மதிப்பீட்டில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் சாலை அமைக்கும் பணி, குடிநீர் வசதி,

மழைநீர் வடிகால் வசதி, அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊரக சுகாதார நிலையம் கட்டுதல், தாமரைக் குளம் சீரமைத்தல், வாய்க்கால் தடுப்பு சுவர் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகளை இந்த மூன்று ஆண்டுகளில் பணிகளை முடித்து அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும், எனினும் பொது மக்களின் அனைத்து குறைகளையும் தீர்க்க முடியுமா என்றால் அதற்கு ஒரே தீர்வு இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தான் என்றும்,

இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக நானும் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களாகிய உங்களை நேரில் சந்தித்து அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களின் குறைகளை ஒரே இடத்தில் கேட்டறிந்து அதை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்து அதற்கு உடனடி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டம் தான் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் என்றும்,

தமிழக முதல்வர் அறிவுறுத்தல் படி இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுவதாகவும், இந்தக் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் அனைத்தும் அரசு அதிகாரியிடம் உடனடியாக வழங்கப்பட்டு அதற்கான தீர்வு கேட்கப்பட்டு வெகு விரைவில் முடிக்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் எடுத்துரைத்தார்

மேலும் இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், திருவெறும்பூர் பகுதி செயலாளர் சிவக்குமார், மாநகராட்சி துணைப் பொறியாளர் ஜெகஜீவன் ராம், மாநகராட்சி இணை ஆணையர் சரவணன், வட்டாட்சிய ஜெயபிரகாஷம், தமிழ்நாடு மின்சார வாரியம் துணை நிர்வாக இயக்குனர் காளிதாஸ்,

மாமன்ற உறுப்பினர்கள் தாஜுதீன், ரெக்ஸ், வட்டக் கழக செயலாளர்கள் தமிழ்மணி, மன்சூர், வினோத் கனகராஜ், செல்வராஜ், அருண், குணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision