சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளான இன்று சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் நடைத்திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெண்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி உற்சவர் மாரியம்மன் முன்பு பூஜை நடைபெற்றது. கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தில் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருவிளக்கு பூஜையின் முடிவில் திருச்சி மாவட்டம் மட்டும்மல்லாது வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision