அரசு பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்க செயினை பறித்து சென்ற நபர் அதிரடி கைது- நகை மீட்பு.

அரசு பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்க செயினை பறித்து சென்ற நபர்  அதிரடி கைது- நகை மீட்பு.

கடந்த (12.04.23)-ந்தேதி இரவு காரைக்காலிருந்து கோவை செல்லும் தனியார் பேருந்தில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் கோவை செல்லும் வழித்தடத்தில் பேருந்து நின்றபோது, பெண் ஆசிரியை தனது கணவருடன் பேருந்திலிருந்து இறங்கி, பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை சென்றுவிட்டு, மீண்டும் பேருந்தில் ஏற கணவருடன் நடத்து வந்த கொண்டிருந்தபோது, ஆசிரியை பின்னால் தொடர்ந்து வந்த ஒருவர் பள்ளி ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிக்க முயன்றபோது, ஆசிரியை சத்தம் போடவே அருகில் இருந்து பொதுமக்கள் மற்றும் பணியில் இருந்த கண்டோன்மெண்ட் காவல்நிலைய தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர்கள் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடிய  நித்தியானந்தன் என்பவரை துரத்தி கையும் களவுமாக பிடித்தும், அவர்மீது கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், எதிரியிமிருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 பவுன் தங்க நகைகளை மீட்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட எதிரியை துரிதமாக செயல்பட்டு பிடித்த தலைமை காவலர் ரமேஷ் என்பவரை திருச்சி மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டியும், பண வெகுமதி வழங்கினார்கள்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn