மழையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர்
தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் காட்டூர் அருகே உள்ள 38வது வார்டு கெண்ணடி தெருவை சேர்ந்த இப்ராஹிம் (59) என்பவரின் கூரை வீடானது இடிந்து விழுந்தது.
இதேபோல் 40-வது வார்டு வள்ளுவர் நகரை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியானபூங்கோதை ( 64) என்பவரது வீடானது மழையில் இடிந்து சேதாரமானது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து இடிந்த வீட்டை பார்வையிட்டதுடன் அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார்.
மேலும் இதே போல் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மழையால் இடிந்து சேதாரமான ஆறு வீடுகளான துவாக்குடி தெற்கு மலை செடிமலை முருகன் கோவில் தெருவை சேர்ந்த அஞ்சம்மாள் (50) என்பவரது கூரை வீடு, துவாக்குடி தெற்கு மலை கோவிந்தராஜ் (61) துவாக்குடி மாதா கோவில் தெரு, ஆரோக்கிய செல்வி (52),
துவாக்குடி மெயின் ரோடு முகமது மைதீன் (49) மற்றும் துவாக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த செல்வி (69) துவாக்குடி தெற்கு மலை நாவலர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்த குமரவேல் (59) ஆகியோரது கூரை மற்றும் ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த வீடுகள் அனைத்தையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன்
வீட்டை இழந்து துயரத்தில் உள்ள அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை, தேவையான அரிசி மற்றும் மல்லிகை பொருட்களை வழங்கி அதிகாரிகளிடம் அவர்களுக்கு அரசின் சார்பாக வழங்கக்கூடிய நிவாரணத்தை உடனே செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், துவாக்குடி நகர செயலாளரும் நகர் மன்ற தலைவர் காயாம்பு பகுதி செயலாளர் நீலமேகம் சிவகுமார் மாமன்ற உறுப்பினர் தாஜுதீன் மற்றும் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம்,அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision