வாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி மனித இடைவெளி

வாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி மனித இடைவெளி

தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது. 

திருச்சி வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே வரும் முகவர்கள், ஊழியர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் முன்னிலையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் உள்ளே சென்றனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும் முகவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக உள்ளே வந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

இதற்கிடையில் திமுகவினரின் வாகனம் மட்டும் உள் அனுமதிக்கப்பட்டதாகவும், அதிமுகவினரின் வாகனம் நுழைவு வாயிலுக்கு முன்பே நிறுத்தப்படுவதாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf