திமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் திருச்சியில் வெளியிட்ட கருத்துக் கணிப்பு

திமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் திருச்சியில் வெளியிட்ட கருத்துக் கணிப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் ( Blossom Hotel ) T-Intelligence என்ற அமைப்பை சேர்ந்த Fr. ஜெகத் கஸ்பர்,  வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.

இந்த அமைப்பினர் கடந்த 2006ம் ஆண்டு முதல் Goodwill Communications என்ற பெயரில் தேரதல் கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த நிறுவனம் T-Intelligence என்ற பெயரில் இயங்கி வருகிறது. நடைபெறவுள்ள 2021 சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழகம் தழுவி வகையில் 70 களப்பணியாளர்கள் , 10 ஒருங்கிணைப்பாளர்கள், 4 நிபுணர்களைக்கொண்டு , 8700 வாக்காளர்களிடம் நேர்காணல் செய்து ஆய்வு மேற்கொண்டனர். 

அந்த ஆய்வின் முடிவுகளை Fr. ஜெகத் கஸ்பர் வெளியிட்டு பேசினார்.

இதில்...

திமிழ்நாட்டில் மொத்தம் உள்ள  234 தொகுதிகளில்,

திமுக கூட்டணி 167
அதிமுக கூட்டணி 51+ or -
மநீம 1
அமமுக 1
கடும்போட்டி நிழவும் தொகுதிகள் 14
கைப்பற்றும் என  தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81