கே.என்.நேருக்கு அளிக்கும் வாக்கு தமிழகத்தின் மாற்றத்திற்காக அளிக்கப்படும் வாக்கு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு. 

கே.என்.நேருக்கு அளிக்கும் வாக்கு தமிழகத்தின் மாற்றத்திற்காக அளிக்கப்படும் வாக்கு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு. 

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ஜி.ராமகிருஷ்ணன்... தமிழகத்தின் பன்பாட்டை பாதுகாப்பதா என்ற கேள்வி இந்த சட்டமன்றத் தேர்தலில் எழுந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மத்திய பா.ஜ.கவின் எடுபிடி அரசாக தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அளிக்கும் வாக்கு தமிழகத்தின் மாற்றத்திற்காக அளிக்கப்படும் வாக்கு. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. 2006 திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது போக்குவரத்து அமைச்சராக இருந்த கே.என்நேருவிடம்  போக்குவரத்து மற்றும் மின்வாரிய, உணவு பிரச்னை சம்மந்தமாக சண்டை போட்டு தொழிலார்களின் உரிமைகளை பெற்றிருக்கிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி போலி விவசாயி என்று மு.க.ஸ்டாலின் கூறியது உண்மை தான். 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து பிரசாரம் செய்யலாமா. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் கொள்முதல் நிலையங்கள், ஆதார விலை இருக்காது. வேளாண் சட்டத்தை ஆதரித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் வணிகர்கள் மரணம், பெண் ஐபிஎஸ் பாலியல் குற்றச்சாட்டு போன்றவை நடக்கும் போது தமிழக சட்டம் ஒழுங்கு பற்றி எடப்பாடி பழனிச்சாமி அருகதை இல்லை. அதிமுக தேர்தல் விளம்பரத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு ஆப் உள்ளது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் பெண் ஐபிஎஸ்-க்கிறகு பாலியல் பிரச்சனைக்கு ஆளான போது எந்த ஆப்பை கிளக் செய்வது.  இந்த தேர்தல் ஜனநாயகமா - சர்வாதிகாரமா, மதச்சார்பின்மையா - வகுப்புவாதமா, ஒற்றை ஆட்சியா - கூட்டாட்சியா, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதா? பெரு நிறுவனங்களின் லாபத்திற்கானதா, தமிழ் நாட்டின் பண்பாட்டை பாதுகாப்பது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

பாஜகவுடன் கூட்டணி சென்ற மாநில கட்சிகள் தங்களது ஆட்சியை பாஜகவிடம் இழந்து நிற்கும் நிலை உள்ளது. இதே நிலை தான் அதிமுக விற்கும் ஏற்படும். இதனால் தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் ஆபத்து ஏற்படும்.கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சி அரசாக செயல்படாமல் மத்திய அரசின் எடுப்பிடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசுக்கு முடிவு கட்டு வதன் மூலமே மக்களின் நலனை பாதுகாக்க முடியும். புதிய பென்சன் திட்டம் ரத்து, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், மாநில பட்டியலில் கல்வி என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள திமுகவின் தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலில் கதாநாயனாக விளங்குகிறது. எனவே தமிழ்நாட்டு மக்களின் உரிமை, பண்பாடு, கலாச்சாரம், கல்வி, தொழில், விவசாயம் ஆகியவற்றை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களித்து தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைய மக்கள் வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU