எம்.எல்.ஏ என்பது பதவியல்ல பொறுப்பாகவே  நினைக்கிறேன் என மநீம வேட்பாளர் வீரசக்தி பரப்புரை

எம்.எல்.ஏ என்பது பதவியல்ல பொறுப்பாகவே  நினைக்கிறேன் என மநீம வேட்பாளர் வீரசக்தி பரப்புரை

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வீரசக்தி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முதன்மை பிரச்சனையை இருப்பது சாக்கடை மற்றும் பொது கழிப்பிட வசதி .பொது இடங்களில் பொதுக் கழிப்பிட வசதி என்பதும் இல்லை.பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

                     Advertisement

பொது கழிப்பிட வசதி  இருந்தும் முறையான பராமரிப்பும் இல்லாமல் உள்ளது . உள்ளே கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது.

அதனை முறையாக பராமரித்து பொது கழிப்பிட வசதியை மேம்படுத்தப்படுவேன்.  நான் எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிடவில்லை. வெற்றி பெற்று வந்தால் அதை நான் ஒரு பொறுப்பாகவே கருதுகிறேன் .எனக்கு சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எனக்கு மெடிக்கல், ஹோட்டல் போன்றவை உள்ளது .அதை வைத்து நான் குடும்பத்தை காப்பாற்றி கொள்வோன்.சிலர் 10 கோடி ரூபாய் போட்டு 50 கோடி ரூபாய் வரை தொழில் வியாபாரம் செய்வது போல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நினைக்கிறார்கள். வீர வசனம் எல்லாம் எனக்கு பேசத் தெரியாது நல்லவனாக பொறுப்புள்ளவராக செயல்பட மட்டுமே தெரியும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81