திருச்சியில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு -ஆணையர் அதிரடி

திருச்சியில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு -ஆணையர் அதிரடி

கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏர்பேக் செயல்படாமல் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இத்தடையை விலக்கக் கோரி  மேல்முறையீடு செய்த வழக்கில் பொதுமக்களின் நலன் கருதியே பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசின் இந்த உத்தரவை, மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

உத்தரவை பின்பற்றவும், நான்கு சக்கர வாகனங்கள் ஒட்டுபவர்கள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், 

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவது தடைசெய்யப்பட்டுள்ள உத்தரவை அமல்படுத்த வேண்டி, வாகன சோதனை மேற்கொண்டு நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி ஓட்டிவரும் வாகனங்களை கண்டறிந்து, உரிய மோட்டார் வாகன சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதன்பேரில், நேற்று 26.10.2021-ஆம் தேதி திருச்சி மாநகர கண்டோன்மென்ட், அரியமங்கலம், பாலக்கரை, கோட்டை, உறையூர் மற்றும் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் சரகங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு வாகன தணிக்கையில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி ஒட்டிவரும் வாகனங்களை கண்டறிந்து, கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில்-30 வழக்குகளும், பாலக்கரை போக்குவரத்து ஒழுங்கு பிரிவில்-21 வழக்குகளும், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில்-30 வழக்குகளும், கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவில்-6 வழக்குகளும், உறையூர் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில்-2 வழக்குகளும் மற்றும் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில்-1 வழக்கும், ஆக மொத்தம் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேற்படி வாகனங்களில் பொருத்தியிருந்த பம்பர்கள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் இதுபோன்று தடைசெய்யப்பட்ட பம்பர் பொருத்தி நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய மோட்டார் வாகன சட்டப்பிரிவின் கீழ் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்  எச்சரித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn