திருச்சியில் கலைஞர் சிலையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சியில் கலைஞர் சிலையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் கலைஞர் சிலை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

கழகத் தலைவரின் அறிவுறுத்தலின் படி, கலைஞர் நூற்றாண்டு விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76வது நிகழ்ச்சியானது,

 கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள கலைஞர் திருவுருவ சிலையை தெற்கு மாவட்ட செயலாளரும்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் பொய்யாமொழி தலைமையில்,

கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னிலையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலைஞர் உருவ சிலையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதுமாநகர செயலாளரும், மண்டல குழு தலைவரும்மான மு.மதிவாணன்,  மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision