திருச்சி சுங்க இலாகா அதிகாரிகள் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபயணம்

திருச்சி சுங்க இலாகா அதிகாரிகள் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபயணம்

உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 அன்று உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விவரிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு 1882 இல் மே 31-ஆம் தேதியை புகையிலை எதிர்ப்பு தினமாக தீர்மானித்தது.

நாகரீக உலகத்தில் புகைபிடித்தல் என்பது பேஷனாக மாறி விட்டது. அதிலும் இளைய சமுதாயத்திற்கு இதில் ஆர்வம் அதிகம்.

இன்றைய உலகின் முக்கியமான நெருக்கடிகளில் ஒன்று புகையிலையும் அதைச்சார்ந்த பொருட்களும் தான். உலக சுகாதார மையத்தின் கணக்குபடி இந்தியாவில் 26 கோடி பேருக்கு மேல் புகையிலை பழக்கம் உள்ளது. சிகரெட் புகைப்பது மட்டுமின்றி புகையிலை மெல்லுவது, குட்கா, பான் உட்கொள்வது என பல ரூபத்தில் புகையிலை உபயோகப்படுத்தப்படுகிறது.

 வேகமாக வளர்ந்து வரும் இப்பழக்கத்தில் இருந்து மக்களை வெளிக்கொண்டு வருவதும் புகையிலையால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக புகையிலை ஒழிப்பு தினத்தின் நோக்கம்.உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கத்தில் முதலாவதும், மிக அபாயமானதும் புகையிலை பழக்கம் தான். இதை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட அதிகம்.

புகையிலை உட்கொள்ளும்போது வாய், நுரையீரல், சுவாசக்குழாய், இருதயம், கல்லீரல், குடல், ரத்தக்குழாய், நரம்பு மண்டலம் என உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். 

திருச்சி சுங்க இலாகா அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி உழவர் சந்தை வரை சென்று விழிப்புணர்வு நடைபயணமாக மீண்டும் அலுவலகத்திற்கு வந்தனர். புகையிலை ஒழிக்க வலியுறுத்தி நடைபயண ஊர்வலத்தில் வாசகங்களை படித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக புகையிலை ஒழிப்பு தின பேரணியை திருச்சி மண்டல சுங்க இலாகா முதன்மை ஆணையர் உமாசங்கர் மற்றும் ஆணையர் அனில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

மன உறுதியும், உடல் ஆரோக்கியம் மீது அக்கறையும் இருந்தால் புகையிலையை முற்றிலுமாக ஒழிக்கலாம். நமக்கும், நம் குடும்பத்திற்கும் ஆரோக்கியம் என்ற விலை மதிப்பில்லாத புதையல் கிடைக்கும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO