தடை செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தடை செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மூன்று குற்றவியல் திருத்த சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்டம் முசிறி தலைமை தபால் அலுவலகம் முன்பு முசிறி தொட்டியம் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் மருதையா தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னதாக தொட்டியம் வழக்கறிஞர் சங்க தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். இப்போராட்டத்தில் வழக்கறிஞர்கள் எம்.வி. மனோகரன், முத்துச்செல்வன், சுரேஷ் குமார், பிச்ச பிள்ளை,

பொருளாளர் யோகராஜ் ,துணைச் செயலாளர் பத்மராஜ், இணைச்செயலாளர் சுகுமார், பிரபாகரன், விவேக் கலைச்செல்வன், எம் ஜி ராஜன், சிவசங்கரன், ரெங்கராஜ், மருதுபாண்டி, விக்னேஸ்வரன், வழக்கறிஞர் அனுசுயா உட்பட 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முடிவில் வழக்கறிஞர் ராஜசேகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision