தொடங்கும் பருவமழை - மின் விபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்ள மின்சாரத்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள்

தொடங்கும் பருவமழை - மின் விபத்துகளில் இருந்து  தற்காத்துக்கொள்ள மின்சாரத்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள்

தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கியுள்ளது. மழைக்காலம் என்றாலே அதனால் ஏற்படும் பாதிப்புகள் தான் நாம் முதலில் யோசிப்போம். 

அதிலும் மின் இயந்திரங்கள் மூலம் ஏற்படும் விபத்துக்களும் பாதிப்புகளும் ஏராளமானவை. 

இதனை கருத்தில்கொண்டு மழைக்காலங்களில் ஏற்படும் மின் விபத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது மின்சாரத்துறை. அதன் விபரம் பின்வருமாறு. 

1. காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.

2. மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் சென்று தொட முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

3. இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட வெளியிலோ செல்ல கூடாது என்றும், மின் சாதண பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

4. ஈரக்கைகளால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது, மின் சாதணங்களை பயன்படுத்தும் போது நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட்டு பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

5. மின் கம்பத்திலோ அதை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்ப்பதோடு, மின் கம்பங்களை பந்தல்களாகவோ, விளம்பர பலகைகளாகவோ பயன்படுத்தக்கூடாது.

6. கட்டிடங்களை கட்டும்போது போதுமான இடைவெளி உள்ளதா என்பதை தெரிந்துக்கொண்ட பின் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.

7. விழாக்காலங்களில் மின் பாதைகளுக்கு அருகில் அல்லது அடியில் தேர் மற்றும் பல்லக்கு இழுக்கும் போது முன்கூட்டியே மின்வாரிய அலுவலர்களுக்கு தெரிவித்து முன்னேற்பாடுகளை மேற்கொள்வதோடு, பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரீல்களில் அலங்கார சீரியல் விளக்குகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மக்கள் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பருவமழை காலத்தை பாதுகாப்புடன் கடந்து வருமாறு திருச்சி விஷன் குழுமம் கேட்டுக்கொள்கிறது. 

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn