ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்போம் - அண்ணாமலை பேச்சு

ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை வேறு  இடத்தில் வைப்போம் - அண்ணாமலை பேச்சு

திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் சட்டசபை தொகுதிகள் அனைத்திலும் நடைபயண யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த 3 ந்தேதி கரூரில் இந்த யாத்திரையை தொடங்கினார். பின்னர் கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் அண்ணாமலை தனது நடைபயணத்தை மேற்கொண்டார். 

அதன் தொடர்ச்சியாக 100வது தொகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம், பின்னர் திருவெறும்பூர் தொகுதியில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டார். திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அண்ணாமலை நேற்று நடைபயணம் மேற்கொண்டார்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் நாச்சியார் கோவிலில் நடைபயணத்தை தொடங்கி அவர், உறையூர் கடைவீதி, சாலை ரோடு, கே.டி.திரையரங்கம் வழியாக, திருச்சி கிழக்கு தொகுதிக்குள்ளே நுழைந்தார். பின்னர் கோட்டை இரயில்வே மேம்பாலம், மலைக்கோட்டை வளைவு, தேவர் ஹால், யானை பம்ப், மரக்கடை, எம்.ஜி.ஆர் சிலை வழியாக காந்தி மார்க்கெட்டில் நடைபயணத்தை நிறைவு செய்தார்.

அண்ணாமலையின் மூன்றாவது கட்ட நடை பயணத்தினையொட்டி அவரை வரவேற்று திருச்சி மாநகரில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் பாஜக கட்சி கொடிகள் சாலையின் இருபுறமும் கட்டப்பட்டிருந்தன. திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் தலைமையிலான கட்சியின் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருச்சியில் தனது மூன்றாவது கட்ட நடை பயணத்தை அண்ணாமலை நிறைவு செய்தார். பின்னர் அண்ணாமலை பேசுகையில் ... கோயிலுக்கு வெளியே யார் இருக்க வேண்டும்? இருக்கக் கூடாது. தமிழகத்தின் மற்ற தலைவர்கள் எங்கு இருக்க வேண்டும்? பெரியார் சிலையை பொருத்தவரை பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.

கோவில்களுக்கு வெளியே கடவுள் மறுப்பு வாசகங்களோடு இருக்கும் சிலையை உடைக்கமாட்டோம் அதை வேறு ஒரு பொது இடத்தில் வைப்போம். திமுகவை பொறுத்தவரை அவர்களின் நாட்கள் எண்ணப்படுகின்றன. திமுகவின் திராவிட கருத்து என்பது ஒரு விஷ கருத்து. மதங்களைப் பிரித்து, ஜாதிகளை பிரித்து பிழைப்பு நடத்துவது என்பது, 70 ஆண்டுக்கால திராவிட அரசியல் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision