தொடர் மழை - பாம்பு கடித்து பெண் சாவு!!

தொடர் மழை - பாம்பு கடித்து பெண் சாவு!!

Advertisement

திருச்சியில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் வயல்வெளிகள் எங்கும் தண்ணீர் தேங்கிய வண்ணம் இருந்தது.இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தேவி மங்கலம் கரியமாணிக்கம் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மகாலட்சுமி (38).

இவர் தனது தோட்டத்திற்கு சென்று மழைநீர் தேங்கி உள்ளதா என பார்த்துவிட்டு மறுபடியும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது. 

Advertisement

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement