உறையூரில் பிச்சைக்காரரிடம் இருந்து பணம் பறித்த 2 நபர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல்

உறையூரில் பிச்சைக்காரரிடம் இருந்து பணம் பறித்த 2 நபர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல்

திருச்சி உறையூர் கோணக்கரை ரோட்டில் பிச்சைக்காரர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் திடீரென பிச்சைக்காரரை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்தனர். இதனால் அந்த பிச்சைக்காரர் கூச்சல் போட்டதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பணம் பறித்த 2 பேரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த உறையூர் போலீசார் அந்த 2 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் எடமலைப்பட்டிப்புதூர் ராமசந்திர நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்கின்ற வெந்தகை பாலமுருகன், கும்பகோணம் பாத்திமாபுரத்தைச் சேர்ந்த பாரதி என்கிற கும்பகோணம் பாரதி என்பதும், இருவர் மீது திருச்சி மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் ஏற்கெனவே பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் ஶ்ரீரங்கம் காவல்நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக இரண்டும் சென்ற போது பிச்சகாரனிடமிருந்து பணம் பறித்துள்ளனர். இதனை முறைப்படி புகார் எதுவும் வரவில்லை என்றாலும், உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH