குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் - மாநகர் நல அலுவலர் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5, வார்டு எண் 11 , உறையூர் சோழராஜபுரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து . இப்பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்களின் புகார் வந்தது.
இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், வார்டுகுழு தலைவர், வார்டுகுழு உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோருடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொது சுகாதாரம் மற்றும் குடிநீர் விநியோகம் செய்யும் பணியின் அவசர அவசியம் கருதி போர்கால அடிப்படையில் பாதாள சாக்கடை சீரமைபப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு தற்போது குடிநீர் நல்ல முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சோழராஜபுரம், மீனாட்சி நகர், இந்திரா நகர் மற்றும் கீரகொல்லை தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான பணிகள் குறித்து மேயர், வார்டுகுழு தலைவர், வார்டுகுழு உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோருடன் மீண்டும் நேரில் ஆய்வு செய்தார்கள். தற்போது அனைத்து பகுதிகளிலும் குடிநீர் நல்ல முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும்,
மேலும் பொது சுகாதார நலன் கருதி அனைத்து வார்டு பகுதிளிலும் குடிநீரை காய்ச்சி பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகர் நல அலுவலர் மணிவண்ணன் பொதுமக்களிடம் அறிவுரை வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision