அகில இந்திய கபடி போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு அபராதம் விதித்த காவல்துறை
மணப்பாறையில் திமுக சார்பில் நான்கு நாட்கள் நடைபெறும் அகில இந்திய அளவிலான ஆண்கள் - பெண்களுக்கான கபடி போட்டி தொடங்கியது. இதில் 15 மாநிலங்களிலிருந்து 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ளனர். திமுக சார்பில் நடைபெறும் அகில இந்திய அளவிலான கபடி போட்டி தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் எல்.வீரப்பன் நினைவு திடலில் தொடங்கியது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முதல் போட்டியினை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி மற்றும் ஒன்றிய செயலாளர் ராமசாமி, திமுக நகர செயலாளர் மு.ம.செல்வம், டி.எஸ்.பி.ராமநாதன், வக்கீல் கிருஷ்ண கோபால், தலைமையாசிரியர் அருள் அரசன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வீரர்களுக்கு வாழ்த்து கூறி துவக்கி வைத்தனர்.
நான்கு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 15 மாநிலங்களிலிருந்து 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியினை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். போட்டி ஏற்பாடுகளை ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி உள்பட கட்சியினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெறும் இடத்திற்கு முன்புறம் போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். போட்டிகளை காண வந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகினர் போலீசாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இரண்டு சக்கர வாகனங்களில் போட்டி நடைபெறும் பகுதிக்கு வருபவர்களை காவல்துறையை நிறுத்தி அவர்களிடம் ஆவணங்களை சரி பார்த்து அபராதம் விதித்தது திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் கோபத்தையும் சர்ச்சையும் உண்டாக்கியுள்ளதாக அபராதம் கட்டியவர்கள் குறிப்பிட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO