14ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு - பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அட்டவணை தயாரிப்பு பணிகள் தீவிரம்!!
14ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகளை நடத்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி அட்டவணை தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படாத நிலையில் நேற்று இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் அரசு, இணைவு பெற்ற மற்றும் தனியார் என 156 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுவதாகும்.
Advertisement
கடந்த ஜூன் மாதம் முதல் வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் நிலையில் நடப்பு பருவத்தேர்வுக்கான வகுப்புகளை ஆசிரியர்கள் முழுவதும் முடித்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் தள்ளிப்போன செமஸ்டர் தேர்வுகள் தற்போது டிசம்பர் 14ம் தேதி முதல் துவங்கவுள்ளதாகவும், பெரும்பாலும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் எனவும், தேர்வுகளுக்கான அட்டவணை தயாரிக்கும் பணியில் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Advertisement
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS