நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய மாநகராட்சி - அதிரடி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசார்!!

நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய மாநகராட்சி - அதிரடி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசார்!!

திருச்சி மாநகரில் பெரும்பாலான சாலைகள் மேடும், பள்ளமுமாக இருப்பதாலும், போக்குவரத்து விதிமீறல்கள் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறன. இது ஒருபுறமிருக்க திருச்சி மாநகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே சாலையின் நடுவில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. 

Advertisement

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாவத்துடன் விபத்தில் சிக்க கூடிய நிலை உருவாகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மற்றும் அப்புறப்படுத்த கோரி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து கால்நடைகள் சாலையின் நடுவே நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்களாகுவது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரில் ஆடு, மாடு வைத்திருப்பவர்களின் உரிமையாளர்களை அழைத்து போக்குவரத்து போலீசார் சாலைகளில் மாடுகளை விடக் கூடாது என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் மாநகரின் பல பகுதிகளில் சாலைகளின் நடுவே மாடுகள் நின்றுகொண்டே இருப்பதை அறிந்த போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Advertisement

பின்னர் அதன் உரிமையாளர்களை வரவழைத்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்த நிலையில், மாநகர போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement