சாக்கடையை திறந்துவிட்டு மூட பணம் கேட்கும் மாநகராட்சி ஊழியர்கள் - நோய்த் தொற்று பயத்தில் பொதுமக்கள்!

சாக்கடையை திறந்துவிட்டு மூட பணம் கேட்கும் மாநகராட்சி ஊழியர்கள் - நோய்த் தொற்று பயத்தில்  பொதுமக்கள்!

திருச்சி மாநகராட்சியின் 57வது வார்டுக்குட்பட்ட ஹவுசிங் யூனிட் பகுதியில் சாக்கடையை மாநகராட்சி ஊழியர்கள் திறந்து விட்டு அதனை அடைத்து விடாமல் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Advertisement

57வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் செல்லும் சாக்கடை திறந்து மூடாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பலர் நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், இதுகுறித்து பலமுறை மாநகராட்சி ஊழியர்களிடம் புகார் அளித்து‌ அவர்கள் வந்து சாக்கடையை அப்படியே போட்டு விட்டு செல்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

அப்பகுதியின் மாநகராட்சி ஊழியர் சேகர் என்பவரிடம் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் பணம் கொடுத்தால் தானே சரி செய்ய முடியும் என அலட்சியமாகப் பேசுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே மாநகராட்சி ஊழியர்கள் விரைவில் திறந்து கிடக்கும் சாக்கடையை அடைக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இது மட்டுமல்லாமல் அப்பகுதியிலிருந்து பணிக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிப்பட்டும், துர்நாற்றம் வீசுவதால் வீடுகளில் இருப்பவர்கள் கதவுகளை மூடி வைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

Advertisement