திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக பரவிய தகவல் - 15 மாதிரிகள் ரிப்போர்ட்

திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக பரவிய தகவல் - 15 மாதிரிகள் ரிப்போர்ட்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வாhர்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு பிரியங்கா என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளிட்ட சிலர் இருந்ததாக தவறான செய்தி பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பதட்டம் அடைந்தனர்.

மருத்துவமனையில் ஏராளமான அனுமதிக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தகவலை கொடுத்து மேலும் வீதியடைய வைத்தனர் இரண்டு நாட்களாக அப்பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சரவணன் மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்தினர்

குடிநீரில் கழிவுநீரும் கலந்து இருக்க வாய்ப்பில்லை என பொதுமக்களிடம் அவர்கள் தெரிவித்துவிட்டு வந்தனர் இருந்தாலும் திருச்சி மாநகர் முழுவதும் உறையூர் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனங்களாக சென்று கொண்டிருக்கின்ற என்று எபல்வேறு விதமான தகவல்கள் பரவிக்கொண்டே இருந்தன.

 அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் இப்பகுதியில் 15 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டது.

மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது .இந்த மாதிரி அனைத்தும் நெகடிவ் என மாநகராட்சி ஆணையர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் மாநகராட்சி பகுதியில் இன்று(21.04.2025) குடிநீர் விநியோகத்தை நிறுத்தி குளோரின் போடப்பட்டு. நாளை முதல் குடிநீர் வினியோகம் சீராக இருக்கும் என தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision