திருச்சியில் மூன்று முறை ஒரே ஆலயத்தில் கொள்ளை சம்பவம் -விசாரணை

திருவெறும்பூர் அருகே குண்டூர் பர்மா காலனியில் உள்ள தூய சகாய மாதா ஆலயத்தின் பீரோ மற்றும் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.திருவெறும்பூர் அருகே குண்டூர் பர்மா காலனியில் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்தில் தூய சகாய மாதா பேராலயம் உள்ளது அண்மையில் தான்கோவில் கொடிமரம் நடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் தூய சகாய மாதா ஆலயத்தைமூடி விட்டு சென்ற பாதர் மனோகர்தாஸ் இன்று காலை வந்து திறந்து பார்த்த பொழுது உள்ளே கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து இருப்பதும் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும் பீரோ அங்கு இல்லாமல் சர்ச் வளாகத்தில் கடப்பதையும் கண்டுள்ளார்.உடனடியாக இச்சம்பவம் குறித்து மனோகர்தாஸ் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நவல்பட்டு போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பொழுது மர்ம நபர் ஒருவர் தூய சகாய மாதா ஆலயத்தின் கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டுமுகத்தை மறைத்துக் கொண்டு உள்ளே நுழைவதும் அந்த மர்ம நபர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் துணியை போட்டு மூடி உள்ளார்.
பின்னர் ஆலயத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் எடுத்து கொண்டதோடு ஆலயத்திற்குள் இருந்த பீரோவை ஆலய வளாகத்திற்கு தூக்கிச் சென்று உடைத்துபீரோவில் இருந்த பொருள்களையும் கொள்ளை அடித்துச் சென்றுஇருப்பது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு இச்சம்பவம் குறித்து உடனடியாக கைரேகை பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கைரேகை பிரிவு போலீசார் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் ஆலயத்தில் இருந்து சுமார் 50,000 ரொக்கம் கொள்ளை போயிருக்கும் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் இந்த ஆலயத்தில் இது மூன்றாவது முறை நடக்கும் திருட்டு என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision