திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது தங்கம் கடத்தி வந்த பயணி ஒருவர் பிடிபட்டனர். தனது பையில் தங்க கம்பிகளாக தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு 47 லட்சத்து 97 ஆயிரத்து 162 ரூபாய் ஆகும். 

மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சார்ஜாவில் இருந்து வந்த பயணியிடம் ஐஸ் தூளாக்கும் இயந்திரத்தில் தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்து பறிமுதல் செய்தனர் அதில் ஒரு கோடியே 22 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 395 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இவ்விரு பயணியிடமிருந்து பறிமுதல் செய்த மொத்த தங்கம் மதிப்பு 944 கிராம் ஆகும். இதன் மொத்த மதிப்பு ஒரு கோடியே 70 லட்சம் ஆகும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision