திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகள் ஓரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் திருச்சி மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தரைக் கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பழக்கடைகள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அகற்றப்பட்டன.
இதில் திடீரென மாநகராட்சி அதிகாரிகள் வருகை தந்து கடைகளை அப்புறப்படுத்துவதாகவும், கடைகளை அகற்றாமல் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரைக்கடை நம்பி பிழைப்பை நடத்தி வரும் நாங்கள் தங்களது கடைகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறி மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திடீரென 30க்கும் மேற்பட்ட தரைக் கடை வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாகதிருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision