திருச்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல் பரிசோதனை முகாம்

திருச்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல் பரிசோதனை முகாம்

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது சபி தலைமை வகித்தார்.

பொருளாளர் ரங்கராஜன், நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், முன்னிலை வகித்தனர். ரங்கா பல் மருத்துவமனை வாய் நோய் தடுப்பு நிபுணர் முத்து கருப்பையா தலைமையில் பல் மருத்துவர் ஆணி வேலன்டினா பள்ளி மாணவ மாணவர்களுக்கான பல் பரிசோதனையினை மேற்கொண்டார். சொத்தைப்பல், இழந்த பல், ஆடும் பல் சொத்தைக்கான வாய்ப்புள்ள கரை, காரை உள்ள பற்கள் வரிசையின்மை, வாய்ப்புண், வாய் துர்நாற்றம், உடைந்த பல், வாய் வலி, மூச்சு விடுதல் போன்றவற்றை பரிசோதனை செய்தார்.

பரிசோதனைக்கு பிறகு பல் பராமரிப்பு குறித்து பேசுகையில்.... ஒவ்வொருவருக்கும் பல் பராமரிப்பு முக்கியமாகும். பல் பராமரிப்பிற்கு சமச்சீரான உணவை உண்ண வேண்டும். தின்பண்டங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், மென்மையான பிரஷ் மற்றும் பற்பசை மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது (குறிப்பாக இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்) பல் துலக்கவேண்டும். ஒவ்வொரு பல்லின் வெளிப்புற, உள் மற்றும் கடிக்கும் மேற்பரப்பை துலக்கவும்.

முன் பற்களின் உட்புறத்தை சுத்தம் செய்ய தூரிகையின் நுனியைப் பயன்படுத்தவும், பாக்டீரியாவை அகற்றி உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்ய உங்கள் நாக்கைத் துலக்க வேண்டும் என்றார். பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிறைவாக பள்ளி ஆசிரியர் உமா நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision