குறுவை சாகுபடிக்கு  மாற்று   நெல் ரகத்தை தேர்வு செய்யும் திருச்சி விவசாயிகள்!

குறுவை சாகுபடிக்கு  மாற்று   நெல் ரகத்தை தேர்வு செய்யும் திருச்சி விவசாயிகள்!

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான முதற்கட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எதிர்பாராத பருவநிலை மாற்றத்தால் கிடைத்த மழை மற்றும்  கூடிய விரைவில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உள்ள நிலையில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் பாரம்பரிய நெல் வகையான
 ASD -16யை அதிக விளைச்சல் மற்றும் அதிக லாபம் தரும்  ரகம் என்பதால்  தேர்ந்தெடுத்துள்ளோம் என்கின்றனர்.  

 திருச்சி மாவட்டத்தில் 4500 ஹெக்டேர்அளவிற்கு  விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கியுள்ளனர் கிட்டத்தட்ட லால்குடி மற்றும்  திருச்சி மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில்  நீர்ப்பாசன வசதி இருப்பவர்கள் தொடங்கியுள்ளனர்.
மிக சிலரே மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதற்காக காத்திருக்கவும் செய்கின்றனர். 80 சதவீதம்  விவசாயிகள் குறுவை சாகுபடியை  தொடங்கியுள்ளனர்.


வேளாண்துறை இணை இயக்குநர் முருகேசன்  கூறுகையில், 
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
எப்போதுமே விவசாயிகள் 
ADT-43,ADT-16,CO-51 ரகங்களை விரும்புவர் ஆனால் இந்த ஆண்டு மாற்று ரக ASD-16
நெல்ரகத்தை  தேர்வு செய்துள்ளனர். 

பொதுவாக இந்த வகை நெல் சாகுபடியானது கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதிகளில் விளைவிக்கப்படும் ஆனால்திருச்சி   மாவட்டத்தில் 
இந்த ஆண்டு 40 டன்னுக்கும் மேலாக விற்பனையாகியுள்ளது. இந்த ரக நெல் சில மாவட்டங்களில் இருந்தும் வாங்கிவந்து  விவசாயிகளுக்கு விற்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் விதைகள் விற்கப்பட்டன. 

 வேளாண் துறை வல்லுநர்கள் கூறுகையில் ASD -16  பாரம்பரிய நெல் வகை  மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டது.   குறைந்த அளவிலான பூச்சி மற்றும் வெப்பத்தால் பாதிக்கக்கூடியது.
குறுவை சாகுபடியில் பயன்படுத்தும் மற்ற ரகங்களை விட அதிக நெல் விதை  எடையானது அதிகமாகும்.ASD -16(24.4.g)(1000 விதைநெல்) ஆனால் ADT43(15.50g)CO51(16g)ADT-36(20g)
 இதனால்  அறுவடைக்கு பின் நெல்  விற்பனை செய்யும் போது எடை அதிகமாவதால் மற்றவைகளைவிட எடையின் அளவு அதிகமாக இருக்கும் எனவே  விவசாயிகளுக்கு இதன் மூலம்  கூடுதல் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.  

 லால்குடியை  சேர்ந்த விவசாயி சுகுமார் கூறுகையில் சென்ற ஆண்டு   பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தோம் ஊரடங்கு மற்றும் அதிகளவு மழையால் அறுவடைக்கு  எப்பொழுதும் கிடைக்கும் வருமானத்தை விட குறைந்த அளவே  பெறமுடிந்தது. எனவே இந்த ஆண்டு  அதிக விளைச்சல்  பெறுவதற்காக ASD-16 நெல் ரகத்தை தேர்ந்தெடுத்துள்ளோம்.

இந்த ரக நெல் சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால் இந்த ஆண்டு இந்த ரக நெல்லை பயிரிட்டுள்ளோம் என்றார். 
லால்குடி இந்திய விவசாய சங்கத்தைச் சேர்ந்த  வீரசேகரன் 
கூறுகையில்
  சென்ற ஆண்டு ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது ஆனால் இந்த ஆண்டு கொஞ்சம் முன்னதாகவே திறக்கப்பட வேண்டுமென்று மாநில அரசிடம் பரிந்துரைத்துள்ளோம்  எனவே தண்ணீர் திறக்கப்பட்ட பின்னர் அவை பாசனத்திற்காக குளங்கள் மற்றும் ஏரிகளில்  சேமிக்கப்பட்டு
பயன்படுத்தப்படும். இதனால் 500 ஏக்கர் அளவிற்கு குறுவை சாகுபடி அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய! https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC