ரூபாய் 4 ¼ இலட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சா பறிமுதல், காருடன் 5 பேர் கைது.
திருச்சி மாநகரம், உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீனிவாசாநகர், 7வது மெயின் ரோடு, ஆதி நகர், ஏ-3 வீட்டின் எதிரில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையர்
உத்தரவின்படி, தனிப்படை போலீசார் கடந்த 28.05.2021-ஆம் தேதி, அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது இருவர் தப்பி ஓடிவிட்டார்கள்.
திருச்சி புத்தூரை சேர்ந்த ஹரிஹரன் என்பவரை பிடித்து சோதனை செய்ததில், சம்பவ இடத்தில் 21 கிலோ கஞ்சா (மதிப்பு ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் ) வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. தப்பியோடிய நபர்களை பற்றி விசாரணை செய்ததில், ஒருவர் திருச்சி ஸ்ரீனீவாசாநகரைச் சேர்ந்த
மதன்குமார் மற்றும் கோவிந்தராஜ் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரி ஹரிஹரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமறைவு எதிரிகளான மதன்குமார் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரை தனிப்படையினர் தேடிவந்தனர். இந்நிலையில் மேற்படி வழக்கின் தலைமறைவு எதிரியான மதன்குமார் என்பவரை கடந்த 30.05.2021-ந்தேதி அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தனிப்படையினர் ரோந்து அலுவலில் ஈடுபட்டிருந்த போது, 01.06.2021 காலை கோணக்கரை ஒயின்ஷாப் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சம்பவ இடத்தில் இருந்த திருச்சி ஸ்ரீனீவாசாநகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் திருச்சி குமரன் நகரைச் சேர்ந்த
அருள் ஆனந்த் ஆகிய இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்த போது சம்பவ
இடத்தில் அவர்கள் 21 கிலோ கஞ்சா (மதிப்பு ரூபாய் 2,லட்சத்து 10 ஆயிரம் ) வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
மேலும், அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கார் ஒன்று கைப்பற்றப்பட்டது. மேலும், அவர்களை தொடர்ந்து விசாரணை செய்ததில் தப்பி ஓடிய தலைமறைவு எதிரியான கோவிந்தராஜ் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மேற்படி இரண்டு எதிரிகளையும்,
கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்படி விசாரணையில், உடல் நலம் சரியில்லாமல் படுக்கையில் இருந்து வரும்
திருச்சி தேவதானத்தைச் சேர்ந்த மில்டன் தினேஷ் (எ) மில்டன், என்பவர் இந்த கஞ்சா
விற்பனைக்கு மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது. மேலும், திருநெல்வேலி பாளையங்கோட்டை சீவலப்பேரியைச் சேர்ந்த சுள்ளான் (எ) லெட்சுமணன் என்பவர் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்து கொடுத்தது தெரியவந்தது. இதனை
தொடர்ந்து மேற்படி இருவரையும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முறையே எதிரி 3 மற்றும் எதிரி 4 ஆக சேர்க்கப்பட்டும், மேற்படி மில்டன் தினேஷ் (எ) மில்டன் என்பவர் உடல் நலம் சரியில்லாதவர் என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை.
மேற்படி சுள்ளான் (எ) லெட்சுமணன் என்பவரை இன்று 03.06.2021-ஆம் தேதி காலையில், வயலூர் ரோடு, குமரன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த போது தனிப்படையினர் கைது செய்து உறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கஞ்சா விற்பனை செய்துவந்த முக்கிய எதிரிகளை கைது செய்தும், அவர்களிடமிருந்து மொத்தமாக 42 கிலோ கஞ்சாவையும் (மதிப்பு ரூபாய் 4 லட்சத்து 20 ஆயிரம் ), ஒரு காரையும் பறிமுதல் செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC