மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்த இந்திய மாணவர் சங்கம்
இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. அவ் மனுவில்...... திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் படிக்க கூடிய மாணவர்களிடம் தனியார் பள்ளி முதலாளிகள் பணம் வசூலித்து வருகின்றனர் .
ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் கல்வி கற்க வேண்டும் என்கிற நோக்கத்தில் 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று தனியார் பள்ளிகள் அரசு 25 சதவீதம் இட ஒதுக்கீடு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு வழங்கவில்லை என காரணம் காட்டி பெற்றோர்களை மிரட்டி பணம் வசூலிக்கிறது. இதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாவட்டம் முன்மை கல்வி அலுவலர் உடனடியாக தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தி 25% இட ஒதுக்கீடு படிக்கக் கூடிய மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் தெரிவித்திருந்தனர் .