வெள்ள பெருக்கு அபாயத்தில் இருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் பணி -கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம்

வெள்ள பெருக்கு அபாயத்தில் இருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் லால்குடி கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம்
பருவ மழை காலங்களில் நீர்வரத்து பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் சாகுபடி பயிர்கள் சேதமடைவதை தடுக்கும் பொருட்டு 2025-26 தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக லால்குடி ஆற்று பாதுகாப்பு கோட்டத்திற்கு உட்பட்ட பூவாளூர் அருகே செல்லும் கூழையாற்றில் 89 லட்சம் மதிப்பில் 4.5 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.பூவாளூர் முதல் காட்டூர் வரை நடைபெறும் இந்த பணியில் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு
தூர் வாரும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இதனால் இடைப்பட்ட பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளப்பெருக்கு கால அபாயங்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision