கந்தர்வக்கோட்டை சிவன் கோவிலில் மண்டபம் கட்டித்தர திருச்சி எம்பி கோரிக்கை

கந்தர்வக்கோட்டை சிவன் கோவிலில்  மண்டபம் கட்டித்தர திருச்சி எம்பி கோரிக்கை

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கந்தர்வகோட்டை சிவன் கோவில் இடத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மண்டபம் கட்டித்தர வேண்டி, மாண்புமிகு அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். 

34 ஊராட்சி, 54 கிராம மக்கள் பயன்பெறக்கூடிய, எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கந்தர்வகோட்டை சிவன் கோவில் இடத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், 

கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர், ஊர் பெருமக்கள், அனைத்துக் கட்சியினர் உள்ளிட்ட பொதுமக்களை ஒன்றிணைத்து, நேரில் அழைத்து, 

மாண்புமிகு இந்து அறநிலைத்துறை அமைச்சர் அண்ணன் சேகர்பாபு அவர்களிடம் மண்டபம் கட்டித்தர வேண்டி எனது கோரிக்கை கடிதத்தை இன்று (21.04.2025) வழங்கினேன். அப்போது அதன் தேவையையும் அவசியத்தையும் எடுத்துரைத்தேன். அத்தனை அலுவல் பணிகளுக்கு மத்தியில் எனக்காக என் தொகுதி மக்களுக்காக நேரம் ஒதுக்கி நேரில் சந்தித்து எனது கோரிக்கை கடிதத்தைப் பெற்றுக் கொண்டதுடன் அவசியம் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்டு உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர முயற்சி மேற்கொள்வேன் என்று அமைச்சர் அவர்கள் நம்பிக்கை அளித்தார்.

அதன் பிறகு வந்திருந்த ஊர் மக்களிடம் நான் பேசும்போது எப்படியும் இந்த கோவிலுக்கான திருப்பனியாக கருதி அவசியம் மண்டபம் கட்டித்தர நான் உறுதி எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினேன். வந்திருந்த அத்தனை மக்களும் மன மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினர். 

புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கா. சி. சிற்றரசு, கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் வைரமூர்த்தி, புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மறவபட்டி பாண்டியன் மற்றும் ஊர் நிர்வாகிகள், பொது மக்கள் உடன் இருந்தனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision