குடிநீர் விஷயத்தில் பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

குடிநீர் விஷயத்தில் பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு பகுதி உறையூர் 8, 9, 10 ஆகிய வார்டு பகுதியில் ஆய்வு செய்த வகையில் பொதுமக்களின் கோரிக்கைகள் 

மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் 8, 9, 10 வது வார்டுகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தண்ணீரில் துர்நாற்றம் வீசுதல், நிறம் மாறிய தண்ணீர் வருதல், தண்ணீரில் புழுக்கள் காணப்படுதல் போன்ற பிரச்சனைகள் இருந்து வருகிறது.  

மேலும் உறையூர் பகுதிகளில் 1977 ஆம் ஆண்டு போடப்பட்ட பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டு இருப்பதினால் பாதாள சாக்கடை குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வாய்க்காலில் கலந்து குடிநீர் குழாய்களிலும் கலந்து விடுகிறது. 

இதனால் தொடர்ந்து குடிநீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது . எனவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதாள இணைப்பில் குடியிருப்புகளின் கழிவுகளை இணைத்து அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் குடிநீர் குழாய்கள் தரைத்தளத்திற்கு கீழே இருப்பதினால் கழிவுநீர் கால்வாய் தண்ணீர் எழுதில் கலந்து விடுகிறது ஆகவே அவற்றை உடனடியாக மாற்றி தரைதளத்திற்கு மேலே மக்கள் எளிதாக பயன்படுத்தும் வண்ணம் அழுத்தம் கொடுத்து குடிநீர் குழாய்களை அமைக்க வேண்டும். தினசரி குடிநீர் தரத்தை வார்டு வாரியாக ஆய்வு செய்ய பணியாளர்களை நியமித்து

நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாநகரம் முழுவதிலும் சுத்தமான மற்றும் தரமான குடிநீர்களை மக்களுக்கு வழங்க முடியும். ‌ இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பொதுமக்கள் குடிநீரினால் நான்கு பேர் இறந்து விட்டதாக கூறிவரும் பிரச்சனைக்கு

 முற்றுப்புள்ளி வைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision