போலியான கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் ஆறு மாத சிறை தண்டனை - திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

போலியான கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் ஆறு மாத சிறை தண்டனை - திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் வெட்ரினரி கவுன்சிலிங் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதும் அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயலாகும். போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இழப்பீடு வழங்காது.

மாவட்டங்களில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர் என கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர் அது முற்றிலும் தவறு. செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் மூன்று மாத காலம் பயிற்சி பெறுகின்றனர்.

அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள் சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால் அவர்கள் கருவூட்டல் பணியை மட்டுமே செய்யத் தகுதியுள்ளவர்கள். எனவே கால்நடைகளுக்கு சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அணுக வேண்டும். போலி மருத்துவர்கள் குறித்த தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநருக்கு அருகிலுள்ள காவல் நிலையத்திலும் தெரிவிக்கலாம்.

போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் முதல் முறை ஆயிரம் ரூபாய், இரண்டாவது முறை ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதக் கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டுஎன்று மாவட்ட ஆட்சித் தலைவர்  சு. சிவராசு   தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO