தமிழகம் இரண்டாவது மூன்றாவது அலைகளிலிருந்து விடை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பேட்டி
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். கோவிலில் உள்ள கோசாலையையும் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்... தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெற்று வரும் கோவில்களில் பணிகள் விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்தப்படும். திருச்சி ஸ்ரீரங்கம் கோசாலை தொடர்பாக தவறான கருத்துகளை பதிவிட்டவர் மீது விளக்கம் பெறப்படும் இந்து சமய அறநிலைத்துறை கீழ் உள்ள கோயில்களில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் குற்றம் எனக் கருதாமல் அதனை உடனடியாக களையப்படும் என்றார்.
கோயில் நிலங்களில் ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. மூன்றாவது அலை வேற வரும் என மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ள நிலையில் கோயில்களில் அண்ணன் தானங்கள் நடத்துவதற்கு பதிலாக பொட்டலங்களாக உணவுகளை கொடுத்து வருகிறோம் .கோவிட் தொற்றிலிருந்து தமிழகம் விடைபெற்று நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர் ஸ்ரீரங்கம் கோவில்களில் கடந்த ஆட்சி காலத்தில் சிலைகள் மாற்றப்பட்டதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது அந்த வழக்குகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தவறிழைத்தவர்கள் மீது நீதிமன்றம் மூலம் தண்டனை பெற நடவடிக்கை எடுக்கப்படும். பொய் வழக்குகள் குறித்தும் விசாரிக்கப்படும் என்றார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO