'குடிக்க' குடியிருப்பில் 7 வருடமாக திருடும் தந்தை மகன் - பைசல் செய்யும் அம்மா - மிரட்டும் நிர்வாகிகள் - அலட்சியம் காட்டும் காவல்துறை.

'குடிக்க' குடியிருப்பில் 7 வருடமாக திருடும் தந்தை மகன் - பைசல் செய்யும் அம்மா - மிரட்டும் நிர்வாகிகள் - அலட்சியம் காட்டும் காவல்துறை.

திருச்சி வயலூர் ரோட்டில் ரெட்டை வாய்க்கால் சோதனை சாவடி அருகே நவநீதாஸ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 48 வீடுகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏழு ஆண்டுகளாக உள்ளே உள்ள கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி உதிரி பாகங்கள் மற்றும் வாகன திருட்டுகளும் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த குடியிருப்பில் வசித்து வருபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்பொழுது புதிதாக குளிர்சாதன மெஷினுக்கு பயன்படுத்தப்படும் அவுட்டோர் யூனிட்டில் உள்ள காப்பர் ஒயர்கள் தொடர்ந்து இரண்டு பேர் திருடி வருவதாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மிக முக்கியமாக இந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது குடியிருப்பு இருக்கும் நிர்வாகிகள் அந்த காட்சிகளை அழித்து விடுவதாகவும் திருடுபவர்களுக்கு துணை போவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

காவல்துறையிடம் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். மிக முக்கியமாக தந்தையும், மகனும் ஒன்று சேர்ந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குடிப்பதற்காக இந்த திருட்டில் ஈடுபடுவதாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் குறிப்பிடுகின்றனர். எப்படி ஒருவரை குற்றம் சாட்ட முடியும் என கேள்வி ஏதும் பொழுது அங்கு திருடு போகும் பொருட்கள் தொடர்பாக இந்த மகனின் தாயாரிடம் போய் கேட்கும் பொழுது அவர் அதற்குரிய தொகையை பைசூல் செய்கிறார். அவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றால் அவர் ஏன் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கேள்வியை முன்வைக்கின்றனர்.

இந்த மகனின் தாய் ஒரு அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர்ந்து காவல்துறையிடம் புகார் செல்லும் போதெல்லாம் அவர்களுக்கு திருடு போன பொருளுக்குரிய தொகையை கொடுப்பதால் சம்பவம் மூடி மறைக்கப்படுகிறது. மேலும் குடியிருப்பில் உள்ள நிர்வாகிகள் அங்குள்ள குடியிருப்பு வாசிகளை மிரட்டுவதாகவும் குறிப்பிடுகின்றனர். தண்ணீர் கொடுப்பதை நிறுத்துவது நீங்கள் வீட்டில் தனியாக இருக்கிறீர்கள் என்று பேசும் வார்த்தைகள் எல்லாம் நிர்வாகிகளிடம் இருந்து வருவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். யாரேனும் காவல்துறையிடம் புகார் கொடுத்தால் அவர்களை அடிப்படை வசதிகளை கட் செய்யும் செயல்களையும் இந்த நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர்.

இந்த தந்தையும், மகனும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சொந்த வீட்டில் வசிக்கும் ஒருவரும் அவருடைய மகனும் இணைந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் காவல் துறைக்கு புகார் அளித்ததால் சிடிடிவி காட்சிகளை கேட்கின்ற நேரம் அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகள் அதனை அழித்து விடுவதாக புகார் எழுதுகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் குறிப்பிடும் போது சிறு குழந்தைகளை வைத்துள்ளோம். அந்த திருட்டு வேலை செய்பவர்கள் பார்த்து பயப்படுவதாகவும் தொடர்ந்து பள்ளி விடுமுறையால் குழந்தைகளை கண்காணிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.

அச்சத்துடன் இந்த குடியிருப்பில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். பெண்மணி ஒருவர் சொந்த வீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த திருட்டு சம்பவத்தில் அவர்களுக்கு தோணும்போதெல்லாம் குறிப்பாக குடிப்பதற்கு பணம் வேணும் எண்ணம் வரும் போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பகலில் இரவிலும் மாடியில் உள்ள காப்பர் கம்பிகள் திருடப்பட்டு வருகிறது.

தற்போது தங்களது ஏசியின் அவுட்டோர் யூனிட்லிருந்து 5 மீட்டர் காப்பர் கம்பியும் திருடப்பட்டு உள்ளது. தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வரும் இவரை உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் வயதானவர்கள், குழந்தைகள் பெண்கள் நிம்மதியாகவும், மன உளைச்சலுக்கு ஆளாகாமல் வசிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் இதில் உடனடியாக தலையிட்டு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து குடியிருப்பு வாசிகளை நிம்மதியாக வசிக்க வழிவகை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision