தலைவர் கைது - செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய விவசாயிகள்

தலைவர் கைது - செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய விவசாயிகள்

பாஜக ஆட்சி அமைத்த பின்பு விவசாயிகளுக்கு நியமான விலை தருவேன், விவசாய விளை பொருளுக்கு இரண்டு மடங்கு லாபம் தருவேன் என மோடி கூறினார். ஆனால் அவர் தரவில்லை என கூறி அய்யாக்கண்ணு தலைமையில் வாரணாசியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து போட்டியிடுவதற்காக 111 விவசாயிகள் திருச்சியில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டனர்.

ஆனால் அவர்களை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் இறக்கி விட்டனர். எனவே அங்கிருந்து திரும்பி திருச்சிக்கு வந்தனர். இதனைக் கண்டித்து இன்று தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று சென்னைக்குச் சென்று தலைமை செயலகம், மத்திய அரசு நிறுவனமான சாஸ்திரி பவன் ஆகியவை முன்பு மத்திய - மாநில அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக செல்ல இருந்தனர்.

ஆனால் விவசாயிகள் சென்னைக்கு புறப்படுவதற்கு முன்பாக திருச்சி காவல்துறையினர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகளை கைது செய்து உறையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனை கண்டித்து திடீரென உறையூர் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் தமிழ்ச்செல்வன், ராமசந்திரன் , தனபால் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை அப்புறப்படுத்த தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் அவருடன் பேச்சு வார்த்தை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உறையூர் பகுதியில் பரபரப்பாக ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision