கேர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இண்ட்டீரியர் டிசைன் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக “ஆர்ட் ஃபார் ஆல் - டிசைன் யுவர் கெரியர்” (ART FOR ALL - Design Your Career) திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஹோட்டல் பிளாஸ்ம்ஸ்-ல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் துணைத் தலைவர் ஜி.சத்யசீலன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இண்ட்டீரியர் டிசைனிங் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியில், மாணவர்களிடம் வடிவமைப்புக் கலையின் மிக முக்கிய நுணுக்கங்களை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் துணைத் தலைவர் ஜி.சத்யசீலன் பகிர்ந்துக் கொண்டார். இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கேர் கல்லூரியின் இண்ட்டீரியர் டிசைன் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இண்ட்டீரியர் டிசைன் படிப்புக்கும் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பையும் அவர் விவரித்தார். மேலும், இண்ட்டீரியர் டிசைன் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகளின் எதிர்காலம் மற்றும் அப்பிரிவுகளில் குவிந்துக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்கள் ஜி.சத்யசீலனிடம் உரையாடினர்.
பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு இண்ட்டீரியர் டிசைன் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் துறையை தேர்ந்தெடுக்க உள்ள மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியை கேர் கல்வி குழுமத்தின் முதன்மை கல்வி அதிகாரி பிரதிவ் சந்த் தலைமையேற்று நடத்தினார். கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் து.சுகுமார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று, திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் நோக்கத்தினை விவரித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பல்துறை பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்துக் கொண்டனர்.
கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பில் இண்ட்டீரியர் டிசைன் எனும் பிரத்யேக பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இண்ட்டீரியர் டிசைன் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பில் எந்தப் பிரிவினை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும், கட்டிடக்கலையின் ஒரு பிரிவாக கருதப்படும் இண்ட்டீரியர் டிசைன் இளங்கலை பட்டப்படிப்பினை தேர்வு செய்து படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..