திருச்சியில் புழுதியில் புயலாக ஓட்டிய தனியார் பேருந்து - நசுங்கிய கார் நடுரோட்டில் சண்டை
திருச்சி மேலரண் சாலையில் கடந்த ஒரு மாத காலமாக பாதாள சாக்கடை பணிகள் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டு வருகிறது .சிங்கார தோப்பில் இருந்து மரக்கடை வரை இருபுறமும் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது .எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் அதுமட்டுமல்லாமல் வாகனங்கள் எதிரில் வருவது கூட தெரியாமல் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
அதேபோல் காரில் வந்த குடும்பத்தினரை தனியார் பேருந்து ஒன்று மோதி விட்டு நிற்காமல் வந்துள்ளது. அந்த காரில் பயணம் செய்த ஒரு இளைஞர் தனியார் பேருந்தில் ஏறி அந்த பேருந்தை நிறுத்துமாறு கூச்சலிட்டு வந்தார். ஆனால் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தவே இல்லை .பின்பு திருச்சி பெரிய கம்மாள தெரு அருகே காரை கொண்டு வந்து குறுக்கே நிறுத்தி காரில் பயணம் செய்த தாய் தந்தையர் இருவரும் தனியார் பேருந்து ஓட்டுநர் இடம் உள்ள ஏறி தகராறு செய்தனர் . ஏற்கனவே ஏறி இளைஞர் இவர்களின் மகன் அவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்பு அப்பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டது.பயணிகளை வேறு பேருந்தில் மாற்றி விட்டனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் அனைவரும் தினமும் ஏராளமான விபத்துகள் சந்திக்கின்றனர். இதை உடனடியாக மாநகராட்சி துரித நடவடிக்கை எடுத்து சாலையை செப்பனிட வேண்டும் புதிய சாலை போட வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..