மூளை பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியே அறுவை சிகிச்சை செய்து திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை

மூளை பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியே அறுவை சிகிச்சை செய்து திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை

மூளைப் பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக வெளிப்புற காயமின்றி அறுவைசிகிச்சை செய்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

கரூர் மாவட்டம் வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் (38), கடந்த ஒரு வருட காலமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த இவர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையின் பிட்யூட்டரி பகுதியில் கட்டி இருப்பதை கண்டறிந்தனர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு ரஜினிகாந்த்தின் மூக்கின் வழியாக மூளையின் பிட்டியூட்டரி பகுதியில் இருந்த கட்டியை வெளிப்புற காயமின்றி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை செய்யப்படுவது இதுவே முதல் முறை. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ரஜினிகாந்த் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO