குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரத்தில் கடந்த 24.05.22-ந்தேதி உறையூர் சாலை ரோட்டில் கற்பகம் டீ கடை அருகில் நடத்து சென்றவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து பட்டா கத்தியை காட்டி மிரட்டி ரூ.3000 பணம் கொள்ளையடித்து சென்றதாக பெற்றப்பட்ட புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் எதிரியானவர் திருவெறும்பூர் காவல்நிலைய ரவுடி கொம்பன் @ ஜெகன் @ ஜெகதீஷ் வயது 28, என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் கோட்டை காவல்நிலைய மேலசிந்தாமணி பகுதியில் செல்போன் கடை வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்ற வழக்கும், உறையூர் காவல்நிலைய எல்லையில் மாவுமில் நடத்தி வரும் வியாபாரி ஒருவரை பணத்திற்காக கடத்த முயற்சி செய்த வழக்கும், திருச்சி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர், சிவகங்கை, நாகப்பட்டினம் போன்ற தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்கும், மூன்று கொலை முயற்சி வழக்குகளும், ஆயுதங்களை கொண்டு பணம் பறித்த வழக்கு உட்பட மொத்தம் 22 வழக்குகள் பல்வேறு காவல் நிலைங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

திருச்சி மாநகரத்தில் கடந்த 15.05.22-ந்தேதி கே.கே.நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார்புரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000/- பணம் கொள்ளையடித்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி ஜோஸ்வா @ ராஜேஸ்குமார் மனோகர் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் பாலக்கரை காவல்நிலைய பகுதியில் பட்டபகலில் வீடு புகுந்து திருடிய வழக்கும், ஏர்போர்ட் காவல்நிலைய பகுதியில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனை செய்த வழக்கும் உட்பட மொத்தம் 8 வழக்குகள் பல்வேறு காவல் நிலைங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரிகள் கொம்பன் @ ஜெகன் @ ஜெகதீஷ் மற்றும் ஜோஸ்வா @ ராஜேஸ்குமார் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளாகள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO