ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கை விபரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில் நேற்று (23.06.2022) மாதாந்திர உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

இதில் ரூபாய் 64 லட்சத்து 45 ஆயிரத்து 942, தங்கம் 148 கிராமும், வெள்ளி 990 கிராமும் மற்றும் 233 வெளிநாட்டு ரூபாய் தாள்களும் கிடைக்க பெற்றது . உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வத் தொண்டர்களும் ஈடுபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO