காவேரி மருத்துவமனை நடத்தும் திருச்சி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி
திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் நடைபெறும் திருச்சி பிரிமியர் கார்பரேட்டி கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் தமிழகத்திலிருந்து பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 16 அணி வீரர்கள் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
தொடக்க விழாவின் போது போட்டி விதிமுறைகள் குறித்து அணி வீரர்கள் மற்றும் அணி தலைவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. போட்டியானது ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறும். தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக காவேரி மருத்துவமனையின் மார்க்கெட்டிங் ஹெட் மாதவன், டாக்டர் ராஜேஷ், டாக்டர் செந்தில் வேல முருகன்,பெசிலிட்டி இயக்குனர் அன்புசெழியன், பொது மேலாளர் ஆன்ரோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெறும் அணிகள் பிளாட்டினம், கோல்டு, எலைட் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வெற்றி ,தோல்வி(ஆறு அணிகள்) களுக்கு விருதுகள் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக சிறந்த இப்போட்டியின் தொடரின் சிறந்த விளையாட்டு வீரருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது .
போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு போட்டியில் பங்கேற்கும் அணி வீரர்களுக்கு உடைகள், உணவுகள், சிற்றுண்டிகள் போட்டிக்கான பந்து வழங்கப்படுமென கிரிக்கெட் போட்டியை நடத்தும் குழு அறிவித்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO