நம்மை விட பீகார்காரர்களுக்கு மூளை கிடையாது - திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சு

நம்மை விட பீகார்காரர்களுக்கு மூளை கிடையாது - திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சு

இளையோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக 'திசை காட்டும் திருச்சி என்ற இணையவழி வேலைவாய்ப்பு முகாம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 15,231 பேர் பதிவு செய்துள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும், நேர்காணலை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி பயிற்றுவிக்கவும், அறிவுத் தகவல்களைப் பகிரவும் துறைசார் நிபுணர்களைக் கொண்டு ஜும் செயலி மற்றும் யூ டியூப் மூலம் ஜூலை 23-ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் ஒரு வாரத்துக்கு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

150-க்கும் அதிகமான தொழில் வணிக நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்கின்றன. இதனை துவக்கிவைத்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு... நம்மைவிட பீகார்காரர்களுக்கு மூளை கிடையாது, ஆனால் பீகார்காரங்கள் 4000 பேர் நம்முடைய பொன்மலை ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார்கள்.
லாலு பிரசாத் யாதவ் அவர்களை ரயில்வே தேர்வில் காப்பி அடிக்க வைத்து பணியமர்த்தி வைத்துவிட்டார். அதனால் தான் ரயில்வே கேட்டில் வடமாநிலத்தவர்களே இருக்கிறார்கள் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

மேலும் மத்திய அரசு நிறுவனங்களில் நமக்கு வாய்ப்பு இல்லை, நாம் பங்கேற்பதில்லை, தமிழகத்தில் 25 ஆண்டுகளாக பதிவு செய்து விட்டும், 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்... 'திருச்சி நவல்பட்டில் உள்ள ஐடி பார்க்கில் கூடுதல் நிறுவனங்கள் வருவதற்கு ஏதுவாக மேலும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. நகர்புறத்தில் ஐடி பார்க் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் அதையும் பரிசீலனை செய்வோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW