கூலித் தொழிலாளி வாங்கி கொடுத்த அதிவேக பைக் மகன் உயிரை பறித்த சம்பவம்.

கூலித் தொழிலாளி வாங்கி கொடுத்த அதிவேக பைக் மகன் உயிரை பறித்த சம்பவம்.

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிப்பவர் சங்கர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மகன் சிவா குண்டூர் அருகே உள்ள தனியார் (எம்ஐஇடி) கல்லூரியில் படித்து வந்தார். மகனின் வற்புறுத்தல் காரணமாக, கூலி வேலை செய்யும் பெற்றோர், தனது மகனுக்கு புதிதாக அதிக விலையுள்ள கேடிஎம் பைக் வாங்கி கொடுத்துள்ளனர்.

அதிவேகத்தில் செல்லக்கூடிய இந்த வகை பைக்குகள், நமது ஊர் சாலைகளில் ஓட்டுவது மிகவும் ஆபத்தான விஷயம். ஆனாலும் மகனின் மன திருப்திக்காக பைக்கை வாங்கிக் கொடுத்துவிட்டு, அடிவயிற்றில் நெருப்பை கட்டியதை போல இருந்துள்ளனர். இந்நிலையில், சிவா இன்று காலை, வீட்டில் இருந்து கல்லூரிக்கு பைக்கில் கிளம்பினார்.

மதுரையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சாலையில்  சிவா சென்றபோது, முதியவர் ஒருவர் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது மோதாமல் இருக்க, தனது கேடிஎம் பைக்கை  அம்பேத்கர் நகர் வளைவு  சாலையில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதியுள்ளார். அதிவேகமாக வந்து மோதியதால் தூக்கி வீசப்பட்ட சிவா, சாலையின் மறுபக்கம் வந்த, காய்கறி ஏற்றி வந்த மினி லோடு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தார்.

சிவா சிக்கிய வேகத்தில் ஆட்டோவின் கண்ணாடிகள் உடைந்து, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி தூரம் இழுத்துச் சென்று, ஒரு மரத்தில் மோதி நின்றது.இவ்விபத்தில் மினி லோடு ஆட்டோவில் சிக்கிய நிலையிலேயே சிவா, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்த மணிகண்டம் போலீசார் விரைந்து வந்து, தீயணைப்பு துறை உதவியுடன்  மினி சரக்கு லாரியில் சிக்கி இருந்த சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்துகுறித்து வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித் தொழிலாளிகளான பெற்றோர், ஆசையாக வாங்கி கொடுத்த அதிவேக பைக், அன்பு மகனின் உயிரைக் பறித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision